குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்த பொதுமக்கள்


குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட  தீயை அணைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 5 April 2022 10:21 PM IST (Updated: 5 April 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்த பொதுமக்கள்

தாராபுரம்:
தாராபுரம் அருகே வளையக்காரன் தோட்டம் பகுதியில் குடியிருப்பு பகுதியை சுற்றி சுமார் 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. தனியார்களுக்கு சொந்தமான அந்த நிலத்தில் நேற்று காலை 11 மணியளவில் புற்கள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கின. அந்த தீ மளமளவென பரவி குடியிருப்பு பகுதியை நோக்கி வந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
ஆனால் தீயணைப்பு வாகனம் வர தாமதம் ஆனது. உடனே களத்தில் இறங்கிய அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து வாளி, குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர். 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மணிநேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் புற்கள் தீப்பற்றி எரிந்து உள்ளதாகவும், யாராவது சிகரெட் பற்ற வைத்துவிட்டு தீக்குச்சியை அணைக்காமல் போட்டு சென்றதால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு நிலவியது.

Next Story