சிதம்பரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி
சிதம்பரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி
சிதம்பரம்,
கடலூர் மாவட்டத்தில் குற்ற மற்றும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகளை கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் முயற்சியால் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களின் நிதியில் இருந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் கடலூர் மற்றும், பண்ருட்டி தொகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிவுடைந்த நிலையில் தற்போது சிதம்பரம் தொகுதியில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது.
சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் காண்காணிப்பு கேமரா பொருத்தும் ஊழியர்கள் கம்ப்யூட்டர் ஹர்ட் டிஸ்க் மற்றும் கேமரா இணைப்பை பொருத்தும் பணியை மேற்கொண்டனர்.
அடுத்த 2 நாட்களில் சிதம்பரம் பகுதியில் உள்ள 25 இடங்களில் 80 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. சிதம்பரம் தொகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக எம்.எல்.ஏ. பாண்டியன் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.
Related Tags :
Next Story