பஞ்சாப்பில் இருந்து அவுரங்காபாத்துக்கு கூரியரில் வந்த 97 வாள்கள் பறிமுதல்
பஞ்சாப்பில் இருந்து கூரியரில் வந்த 97 வாள்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
புனே,
பஞ்சாப்பில் இருந்து கூரியரில் வந்த 97 வாள்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
கூரியரில்
பஞ்சாப்பில் இருந்து அவுரங்காபாத்திற்கு சமீபத்தில் கூரியரில் அனுப்பப்பட்ட 37 வாள்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். இதையடுத்து புனே போலீசார் கூரியரில் வரும் பார்சல்களை கவனமாக ஸ்கேன் செய்ய கூரியர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.
இந்தநிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து பிம்பிரி சிஞ்ச்வட்டில் உள்ள கூரியர் நிறுவனத்துக்கு 2 மரப்பெட்டிகள் வந்து இருந்தன. கூரியர் நிறுவனம் அந்த பெட்டிகளை ஸ்கேன் செய்த போது அதில் வாள்கள் இருந்தது தெரியவந்தது.
97 வாள்கள் பறிமுதல்
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கூரியரில் வந்த மரப்பெட்டியில் இருந்த 92 வாள்கள், 2 பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் பார்சலை அனுப்பிய அமிர்தசரசை சேர்ந்த உமேஷ் சூட், பார்சலை பெற இருந்த அவுரங்காபாத்தை சேர்ந்த அனில் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மற்றொரு கூரியரில் அமிர்தசரசில் இருந்து அகமதுநகரை சேர்ந்தவருக்கு வந்த 5 வாள்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் இந்த வாள்கள் அதிக எண்ணிக்கையில் எதற்காக பஞ்சாப்பில் இருந்து புனேக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story