நாந்தெட்டில் கட்டுமான அதிபர் சுட்டுக்கொலை
கட்டுமான அதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மும்பை,
கட்டுமான அதிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கட்டுமான அதிபர்
நாந்தெட் சர்தா நகரை சேர்ந்தவர் சஞ்சய் பியானி. கட்டுமான அதிபர். இவர் காலை 11 மணி அளவில் வெளியில் சென்று விட்டு காரில் வீடு திரும்பினார். காரை விட்டு இறங்கி வீட்டுக்குள் செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் சஞ்சய் பியானியை நோக்கி, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 8 முதல் 10 ரவுண்ட் சுட்டு விட்டு தப்பி விட்டனர்.
மர்ம ஆசாமிகள் சுட்டதில் துப்பாக்கி குண்டுகள் அவரது உடலை துளைத்தன. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தீவிர விசாரணை
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை துப்பாக்கியால் சுட்ட ஆசாமிகள் யார்?, இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ரியல் எஸ்டேட் தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story