ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில துணைத்தலைவர் முத்துக்குமார், மாநில செயலாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், அசேன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story