ரூ.3 லட்சம் கடன் தொகையை தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை-கடன் வாங்கியவரும் ரெயில் முன் பாய்ந்து சாவு


ரூ.3 லட்சம் கடன் தொகையை தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை-கடன் வாங்கியவரும் ரெயில் முன் பாய்ந்து சாவு
x
தினத்தந்தி 5 April 2022 11:41 PM IST (Updated: 5 April 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ரூ.3 லட்சம் கடன் தொகையை தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அவரிடம் கடன் வாங்கிய பெயிண்டரும் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல், ஏப்.6-
பெண் தற்கொலை
நாமக்கல் சின்னமுதலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி காவேரி (வயது 35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். காவேரி, மரூர்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ராஜமாணிக்கம் (50) என்பவருக்கு சுமார் ரூ.3 லட்சம் கடன் கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொகையை பலமுறை கேட்டும், ராஜமாணிக்கம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனம் உடைந்த காவேரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெயிண்டர் சாவு
இதற்கிடையே பெயிண்டர் ராஜமாணிக்கம் மரூர்பட்டி பகுதியில் நேற்று ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் ரெயில்வே போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் பிரச்சினையில் போலீசில் சிக்கி கொள்வோம் என நினைத்து அவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொகையை தராததால் பெண் தற்கொலை செய்து கொண்டதும், அவரிடம் கடன் வாங்கியவர் ரெயில் முன் பாய்ந்து இறந்ததும் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story