சிவகங்கை மாவட்டத்தில் 10 கிராமங்களில் பட்டா திருத்த சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் 10 கிராமங்களில் பட்டா திருத்த சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று(புதன்கிழமை) தேவகோட்டை வட்டத்தில் தேர்போகி கிராமம், மேலச்செம்பொன்மாரி மற்றும் உஞ்சனை கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் சுண்ணாம்பிருப்பு மற்றும் இளங்குடி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் ஆலங்குளம் மற்றும் கத்தப்பட்டு கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் முள்ளியாரேந்தல் மற்றும் மேலப்பிடாரிச்சேரி கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் தடியமங்கலம் கிராமத்திலும் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story