டேங்கர் லாரி மோதி பசுமாடு பலி


டேங்கர் லாரி மோதி பசுமாடு பலி
x
தினத்தந்தி 5 April 2022 11:42 PM IST (Updated: 5 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் அருகே டேங்கர் லாரி மோதி பசுமாடு உயிரிழந்தது.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த கொண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 68). இவருக்கு சொந்தமான 2 பசுமாட்டை அதே பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மேய்த்து கொண்டிருந்தார். மாலையில் வீட்டிற்கு மாடுகளை ஓட்டி வந்துள்ளார். 

கொண்டாபுரம் கால்நடை மருத்துவமனை அருகே மாடுகளுடன் சுந்தரம் நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி பெட்ரோல், டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பசுமாட்டின் மீது மோதி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. 
இதனால் டேங்கில் இருந்த பெட்ரோல், டீசல் கசிந்து நெடுஞ்சாலையில் வெள்ளமாக ஓடியது. இந்த விபத்தில் பசுமாடு உயிரிழந்தது. பசுமாட்டை ஓட்டி வந்த சுந்தரம் காயத்துடன் உயிர் தப்பினார்.

 அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story