அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு
அரசு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்
கிருஷ்ணகிரி:
அரசு பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதிகளில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி தாலுகா மேகலசின்னம்பள்ளி அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாணவிகள் வருகை பதிவேடு, உணவு பொருட்கள் இருப்பு, சமையல் அறை, கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர், மற்றும் பாதுகாப்பு முறைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து காவேரிப்பட்டணம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவிகள் விடுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 13 மாணவர்கள் விடுதி, 7 மாணவிகள் விடுதி, மற்றும் 2 அரசு கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி, 2 மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு பழங்குடியினர் மாணவர் விடுதி, ஒரு பழங்குடியினர் மாணவிகள் விடுதி என மொத்தம் 26 விடுதிகளில் 1,317 மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
சிறப்பு வகுப்புகள்
மேகலசின்னம்பள்ளியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல அரசு மாணவிகள் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவிகள் தங்கி படிப்பதற்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில் 44 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் விடுதி காப்பாளர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அதேபோல பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல நலத்துறை சார்பாக 25 மாணவர் விடுதியும், 19 மாணவிகள் விடுதிகள் என 44 விடுதிகளில் 3,016 மாணவ-மாணவிகள் தங்கி கல்வி படித்து வருகிறார்கள். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வரை தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 4 இலவச இணை சீருடைகள் வழங்கப்படுகிறது. மேலும் சிறப்பு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள், ஆங்கில பேச்சாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, தாசில்தார் சரவணன் மற்றும் விடுதி காப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story