ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2022 11:42 PM IST (Updated: 5 April 2022 11:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்
தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்துவரி உயர்வு
தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி நேற்று ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் வரவேற்று பேசினார். 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆர்ப்பாட்ட கோஷங்களை வாசித்தார். சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வாக்களித்த மக்களை ஏமாற்றக்கூடாது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போகக்கூடாது. அராஜக போக்கை கைவிட வேண்டும் என்று அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். 
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி முத்தையா, சதன்பிரபாகர், மாவட்ட இணை செயலாளர் கவிதாசசிக்குமார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டியன், ெஜயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சேதுபாலசிங்கம், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சாமிநாதன், ஆர்.ஜி.ரெத்தினம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி கருப்பையா, மண்டபம் ஜானகிராமன், முன்னாள் நகர் செயலாளர் வரதன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சரவணகுமார், ராம்கோ தலைவர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் இந்திராணி செல்வம், தஞ்சிசுரேஷ், முன்னாள் கவுன்சிலர் நாகநாதசேதுபதி, விற்பனைக்குழு துணைத்தலைவர் ராமசேது, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன் ராமேசுவரம் நகர செயலாளர் கே.கே.அர்ஜுனன், மின்வாரிய கோட்டபிரிவு செயலாளர் முருகன்  உள்பட பலர் பங்கேற்றனர். 
மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நாகஜோதி நன்றி கூறினார்.

Next Story