வனத்துறைக்கு சொந்தமான காட்டில் அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேருக்கு அபராதம்


வனத்துறைக்கு சொந்தமான காட்டில் அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 April 2022 11:43 PM IST (Updated: 5 April 2022 11:43 PM IST)
t-max-icont-min-icon

வனத்துறைக்கு சொந்தமான காட்டில் அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சிவகங்கை, 
வனத்துறைக்கு சொந்தமான காட்டில் அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ரோந்து
சிவகங்கை மாவட்ட வனச்சரக அலுவலர் பழனிச்சாமி தலைமையில் வனவர் பிரவீன் பாரதி, வனக்காப்பாளர் கொன்னடியான், சரவணன், வனக்காவலர் ெரங்கசாமி ஆகியோர் சிவகங்கையை அடுத்த உடையாரேந்தல் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியில் இரவுநேரத்தில் ரோந்து சென்றனர். 
அப்போது வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஓடை மணலை சிலர் டிராக்டர்களில் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
அபராதம்
இதற்கிடையில் வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர்களிடம் உடையாரேந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. இதைதொடர்ந்து மணல் அள்ள முயன்ற உடையாரேந்தல் பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக வனச்சரக அலுவலர் பழனிச்சாமி கூறியதாவது, வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

Next Story