கன்னியாகுமரி கடலில் நிலவும் மாற்றம்


கன்னியாகுமரி கடலில் நிலவும் மாற்றம்
x
தினத்தந்தி 5 April 2022 11:44 PM IST (Updated: 5 April 2022 11:44 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி கடலில் காலையில் நீர்மட்டம் தாழ்வாகவும், மாலையில் சீற்றமாகவும் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் காலையில் நீர்மட்டம் தாழ்வாகவும், மாலையில் சீற்றமாகவும் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி கடல்
சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடலில் நீர்மட்டம் திடீரென தாழ்வாக செல்வதும், மாலையில் கடல் சீற்றமாகவும் இருந்து வருகிறது. இதனால் படகு போக்குவரத்து தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
உள்வாங்கியது சீற்றம்
இந்த நிலையில் காலையில் கடல்நீர் உள் வாங்கியது. எனவே காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
3 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கடல் இயல்பான நிலைக்கு திரும்பியது. அதனை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. மாலையில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக இருந்தது. ஆக்ரோஷமாக பாய்ந்த அலை பாறைகளின் மீது மோதி சிதறின. கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்கவும், அதன் அருகே செல்லவும் விடாமல் சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்தனர். கன்னியாகுமரி கடலில் கடந்த சில நாட்களாக காலையில் நீர்மட்டம் தாழ்வாகவும், மாலையில் சீற்றமாகவும், இயல்பு நிலைக்கு திரும்புவதுமாக இருப்பது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story