கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு


கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 6 April 2022 12:05 AM IST (Updated: 6 April 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை, திட்டு படுகை, நாதல்படுகை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் வடரங்கம் கிராமத்திலிருந்து குழாய்கள் மூலம்  குடிநீர் எடுக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் சந்தப்படுகை கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி கொண்டிருப்பதால் அப்பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெயில் வாட்டி வதைப்பதால் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். ஆகவே, கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story