அத்திப்பட்டு ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
அத்திப்பட்டு ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் நீர் மேலாண்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானமணிஅருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சித்ரா வரவேற்றார்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடங்கி விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும் உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், பொறியாளர் ஏகநாதன், பணி மேற்பார்வையாளர் தமிழ்செல்வி, ஊராட்சி செயலாளர் சிதம்பரம், வார்டு உறுப்பினர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story