தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே படந்தால் மருதுபாண்டி நகரில் குணசேகரன் (வயது 55) என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இங்கு மருந்து குச்சியை வாங்கி தீப்பெட்டியில் அடைக்கும் வேலை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று 6 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது வேலையாட்களுக்கு தேவையான மருந்து குச்சிகளை தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் இறக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story