வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நவல்பட்டு்,ஏப்.6-
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
திருவெறும்பூரை அடுத்த குண்டூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மூர்த்தி (வயது 34). கூலித் தொழிலாளியான இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று மாலையில் மீண்டும் வீடு திரும்பினார்.
அப்போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story