பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி, குடும்பத் தகராறில் அந்தப் பெண் அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த கவிதாவை(22), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. மேலும் அவரது தாய் ராமாயியின் நடவடிக்கை கவிதாவிற்கு பிடிக்காததால் மணிகண்டன்-கவிதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கம்போல் கணவன்- மனைவி இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை கொடுமையால் கவிதா தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story