பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு
பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார வள மையம் சார்பாக பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த ஆய்வானது காட்டாத்தூர், வில்லாநத்தம், பட்டணங்குறிச்சி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. இந்த ஆய்வில் ஏற்கனவே பள்ளி சென்ற மாணவர்களில் தற்போது பள்ளிக்குச் செல்லாமல் இருந்த 7 மாணவர்கள் கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேகலா, அந்த மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறி, மீண்டும் கல்வியை தொடர மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்ேபாது வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருள்ராஜ் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள் ரமேஷ், கார்த்திகேயன், ஆசைத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story