பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 1:39 AM IST (Updated: 6 April 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தா.பழூர்:
பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து தா.பழூர் கடை வீதியில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு மணிவேல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விலை பேசுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story