மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது
திருவையாறு;
திருவையாறு அருகே உள்ள வீரசிங்கம்பேட்டையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவில் பங்குனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சாமி புறப்பாடு், வானவேடிக்கையும், கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் உள்ளுர் திருவிழா நடைபெற்றது. இதில் வீரசிங்கம்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று வெளியூர் திருவிழா நடைபெற்றது. இதில் திருவையாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து மாவிளக்கு போட்டு மாரியம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் சிவசங்கரி, தக்கார் பரமானந்தம், கணக்கர் செல்வம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story