கோபி அருகே ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் இருந்த ரூ.10 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த அரசு ஊழியருக்கு பாராட்டு
கோபி அருகே ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் இருந்த ரூ.10 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த அரசு ஊழியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோபி அருகே ஏ.டி.எம். மையத்தில் எடுக்கப்படாமல் இருந்த ரூ.10 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த அரசு ஊழியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நகராட்சி மேலாளர்
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 74). இவர் சத்தியமங்கலம் நகராட்சியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டர். ஒத்தக்குதிரையில் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த மையத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அவர் ஏ.டி.எம். கார்டை சொருகி ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராததால் அவர் சென்றுவிட்டார். அவர் சென்ற பின்னர் பணம் ெவளியே வந்து எடுக்கப்படாமல் அப்படியே இருந்துள்ளது.
ரூ.10 ஆயிரம்
இந்த நிலையில் அவர் சென்ற பிறகு பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்துக்கு வேலாயுதம் சென்று உள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் எடுக்கப்படாமல் இருந்த பணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்தார். அதில் ரூ.10 ஆயிரம் இருந்தது. உடனே அவர் பணத்தை எடுக்காமல் சென்றவர் அந்த பகுதியில் நிற்கிறாரா? என தேடிப்பார்த்தார். ஆனால் அவரால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் ரூ.10 ஆயிரத்தை கோபி போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அங்கு பணியில் இருந்த சப்- இன்ஸ்பெக்டர் வசந்தகுமாரிடம் ரூ.10 ஆயிரத்தை வேலாயுதம் ஒப்படைத்தார். அவருக்கு போலீசார் பாராட்டுகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story