3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
செங்கோட்டையில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தென்காசி:
செங்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிதடி, திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த அஜ்மீர் காஜா ஷெரிப் (வயது 30), முஸ்தபா கமால் (30), சக்தி பிரபாகரன் (23) ஆகியோரை செங்கோட்டை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். அதை மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் ஏற்று, அஜ்மீர் காஜா ஷெரிப் உள்ளிட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பாளையங்கோட்டை சிறையில் சமர்ப்பித்தார்.
Related Tags :
Next Story