புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 April 2022 2:20 AM IST (Updated: 6 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

சேதமடைந்த குடிநீர் தொட்டி
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பள்ளியூர் ஊராட்சி வெண்ணபுத்தூர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் குடியான தெருவில் உள்ள நீர்தேக்க தொட்டி பழுது அடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் குடிநீர் தொட்டி அருகே விளையாடி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதுவும் நடைபெறுவதற்கு முன்பு குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், வெண்ணப்புத்தூர்.

Next Story