கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 6 April 2022 2:21 AM IST (Updated: 6 April 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி லோக்கூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 3-ந் தேதி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து மாயமான 17 வயது கல்லூரி மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் கல்லூரி மாணவியை சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ரதன் (வயது 22) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் ரதனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த கல்லூரி மாணவி, சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்றதும், அவரது சித்தி தங்கியுள்ள வீட்டின் உரிமையாளரின் மகன் ரதனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ரதன் ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கல்லூரி மாணவியை கடத்தி சென்ற ரதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அந்த கல்லூரி மாணவியை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Next Story