விவசாயியை தாக்கி நகை பறிப்பு


விவசாயியை தாக்கி நகை பறிப்பு
x
தினத்தந்தி 6 April 2022 2:34 AM IST (Updated: 6 April 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

மண்டைகக்ாடு அருகே வவிசாயியை தாக்கி நகையை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட  சேரமங்கலம் கல்லத்திவிளையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 52), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (42) என்பவருக்கும் பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சுபாஷின் வீட்டு வழிப்பாதையில் ஒரு கார் வந்து நின்று உள்ளது. அதில், ஹரிதாசுக்கு தெரிந்தவர்கள் வந்துள்ளனர். இதைக்கண்ட சுபாஷ், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஹரிதாஸ் என் வீட்டுக்கு வந்தவர்களிடம் ஏன் தகராறு செய்கிறார் என கேட்டு சுபாஷை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த ¾ பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுபாஷ் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஹரிதாஸ் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story