ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் கைது


ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2022 2:49 AM IST (Updated: 6 April 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை:
களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
குமரி மாவட்டம் எஸ்.டி.மங்காடு பணமுகம் பகுதியை சேர்ந்த அஜின் (26), குளப்புறம் பொன்னப்ப நகர் பாறையடி விளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஷிஜி (41) ஆகிய 2 பேரும் குளப்புறம் அன்னிகரை பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த 26-ந் தேதி இரவு நின்று கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடியது. இந்த தாக்குதலில் 2 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் இவர்கள் 2 பேருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஷிஜி பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது 
ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் இந்த கொலை வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் மெதுகும்மல் மேற்குவிளை ஜோஸ் (22), காப்புக்காடு மாராயபுரம் பாறவிளையை சேர்ந்த மகேந்திர குமார் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். ஆனால் இந்த கும்பல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தது.
இந்தநிலையில் குழித்துறையை அடுத்த மருதங்கோடு செம்மண்விளையை சேர்ந்த கிளாம் (26), குளப்புறம் வரவிளையை சேந்த ஜஸ்டின் ஜோசப்ராஜ் (38), மாராயபுரம் பாறவிளையை சேர்ந்த மகேந்திர குமார் (48) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளாவுக்கு அரிசி கடத்துவதை போலீசுக்கு தகவல் கொடுத்த ஆத்திரத்தில் 2 பேரையும் அரிவாளால் வெட்டியதாக இவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை தேடிவருகின்றனர்.

Next Story