டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விளையாட்டு விழா


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விளையாட்டு விழா
x
தினத்தந்தி 6 April 2022 6:08 PM IST (Updated: 6 April 2022 6:08 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விளையாட்டு விழா நடைபெற்றது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விளையாட்டு விழா, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமை தாங்கினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, கொடியேற்றி விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
மாணவிகள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி, உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து நீலம், இளஞ்சிவப்பு என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தடகள போட்டிகள் நடந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவி இருதய த்ரீஷா தனிநபர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. மாணவ செயலாளர் இசை அருளி விளையாட்டு அறிக்கை வாசித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயண ராஜன் பரிசுகளை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற நீல நிற அணிக்கு சுழற்கேடயம் பரிசு வழங்கப்பட்டது. பேராசிரியர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Next Story