மலைப்பகுதியில் காட்டுத்தீ
வருசநாடு அருகே மலைப்பகுதியில் காட்டுத் தீப்பிடித்தது.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் மரங்கள் மற்றும் புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மணலாற்று குடிசை கிராமம் அருகே அமைந்துள்ள மலைப்பகுதியில் காட்டு தீப்பிடித்தது.
சற்று நேரத்தி தீ மளமளவென மலையின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ தொடங்கியது. தகவலறிந்த வருசநாடு வனத்துறையினர் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story