இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை
தேனி மாவட்டத்தில் எடையளவு கருவிகளுக்கு முத்திரையிட இணையவழியில் விண்ணப்பிக்க புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேனி:
தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் எடையளவு கருவிகளை முத்திரையிடாதோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பணிப் பகுப்பாய்வு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு உள்ளதால் உரிய ஆய்வுகள் மேற்கெண்டு மேல்நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவு கருவிகளை முத்திரையிட்டுக் கொள்ள இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை கவனத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள், மின்னணு தராசுகள், மேடை தராசுகள், கை தராசுகள், படிக்கற்கள், ஊற்றல் அளவைகள், இதர எடை அளவுகள், எடையளவு கருவிகள் புதிதாகவும், மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு வழங்கும் பணிகள் இணையதளம் வழியாக தொடங்கி உள்ளன.
எனவே, www.labour.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வின்போது இது கண்டறியப்பட்டால் எடையளவு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story