திருவிழாவுக்கு பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு


திருவிழாவுக்கு பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 April 2022 9:33 PM IST (Updated: 6 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பஸ் நிறுத்தம் முன்பு பொதுமக்களுக்கு இடையூறாக திருவிழாவுக்கு பேனர் வைத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி: 

தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு பஸ் நிறுத்தத்தை மறைத்தும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் கோவில் திருவிழாவுக்கு சிலர் விளம்பர பேனர் வைத்து இருந்தனர். இந்த பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதியும் பெறவில்லை. 

இதையடுத்து பேனர் வைத்த கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியை சேர்ந்த அஜித்குமார் (வயது 23), சுரேந்தர் (27), வடிவேல், தனபால் ஆகிய 4 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story