வாக்காளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என்று கூறுவதா?- பா.ஜனதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு
வாக்காளர்களிடம் அமாக்கத்துறை விசாரணை நடத்தும் என்று கூறுவதா? என பா.ஜனதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை,
வாக்காளர்களிடம் அமாக்கத்துறை விசாரணை நடத்தும் என்று கூறுவதா? என பா.ஜனதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
பணப்பட்டுவாடா
கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான சந்திரகாந்த் ஜாதவ் கடந்த டிசம்பர் மாதம் மரணமடைந்தார். இதையடுத்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சந்திரகாந்த் ஜாதவின் மனைவி ஜெயஸ்ரீ போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் சத்யஜித் கதமும் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கோலாப்பூரில் இடைத்தேர்தலை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான சாம்னாவில் பா.ஜனதாவை கடுமையாக தாக்கி தலையங்கம் வெளியிட்டப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நல்ல திட்டம்
வாக்காளர்கள் மீது அமலாகத்துறை விசாரணை நடத்தப்படும் என பா.ஜனதா கூறுகிறது. அப்படியானால் முதலில் பா.ஜனதா வெற்றிபெற்ற தொகுதிகளில் இருந்து அந்த விசாரணையை தொடங்க வேண்டும்.
குறிப்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ. அடானாசியோ மான்சரேட் மற்றும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் ஆகியோர் வெற்றி பெற்ற பானாஜி மற்றும் சாகல் தொகுதியில் முதலில் விசாரணை நடத்தவேண்டும்.
வாக்காளர்களை அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்த சந்திரகாந்த் பாட்டீல் ஒரு நல்ல திட்டத்தை முன்வைத்துள்ளார். எங்கும் மோடி, வீடு, வீடாக மோடி என்ற கோஷத்துடன் “எங்கும் அமலாகக்கத்துறை, வீடு வீடாக அமலாகத்துறை” என்பதை இணைத்தால் மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story