வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா
வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழா நடந்தது.
வேப்பனபள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கோஜிகொத்தூர் கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவையொட்டி நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவில் 100 மீட்டர் இலக்கை காளைகள் சீறிப்பாய்ந்து சென்றது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் இலக்கை குறித்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்தனர்.
Related Tags :
Next Story