தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சோமு, கோபாலன், குப்புசாமி, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். ஓய்வூதியர்களுக்கு 80 வயது முதல் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை 65 வயது முதல் 5 சதவீதமும், 70 வயது முதல் 10 சதவீதமும் உயர்த்தி வழங்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வூதியர்களுக்கான நல மையத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் பணிபுரிந்த ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story