முத்தாரம்மன் கோவிலில் கொள்ளை


முத்தாரம்மன் கோவிலில் கொள்ளை
x
தினத்தந்தி 6 April 2022 10:51 PM IST (Updated: 6 April 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

வில்லுக்குறி அருகே முத்தாரம்மன் கோவிலில் கொள்ளை நடந்தது.

திங்கள்சந்தை:
வில்லுக்குறி அருகே முத்தாரம்மன் கோவிலில் கொள்ளை நடந்தது.
வில்லுக்குறி அருகே வடக்கு நுள்ளிவிளையில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை பூஜைகள் நடப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு கோவிலில் பூஜைகள் முடிந்ததும் நடையை சாத்தி விட்டு பூசாரி சென்று விட்டார். மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதாவது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் மற்றும் குத்துவிளக்குகள், ஒரு பானை, ஒரு உருளி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து ஊர் செயலாளர் மணிகண்டன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.
---

Next Story