மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளிக்கடை ஊழியர் போக்சோவில் கைது
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளிக்கடை ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் கிராமத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். மனைவி கோபித்துக் கொண்டு தனியாகப் பிரிந்து சென்று வசித்து வந்தார். உறவினர்கள் சமரசம் பேசி, அவரை அழைத்து வந்து உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.
உறவினர் வீட்டுக்கு தினமும் குடிபோதையில் வந்த ஜவுளிக்கடை ஊழியர் தனது மனைவி மற்றும் மகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று குடிபோதையில் வந்த ஊழியர் தனது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்து கையால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும் துன்புறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மகள் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் ஜவுளிக்கடை ஜவுளிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story