ஆம்பூர் அருகே சீட்டுப்பண தகராறில் மூதாட்டி கொலை. வயதுமூப்பு காரணமாக இறந்ததாக நாடகமாடிய மகன் கைது


ஆம்பூர் அருகே சீட்டுப்பண தகராறில் மூதாட்டி கொலை. வயதுமூப்பு காரணமாக இறந்ததாக நாடகமாடிய மகன் கைது
x
தினத்தந்தி 6 April 2022 11:29 PM IST (Updated: 6 April 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே சீட்டுப்பணம் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே சீட்டுப்பணம் தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்டார். வயது மூப்பு காரணமாக இறந்துவிட்டதாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டி கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த ஈச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சின்னதாய் (வயது 63). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். வெங்கடேசனின் மூத்த மகன் வனராஜ் (38). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். 

இவர் தனது மனைவியுடன் ஈச்சம்பட்டு கிராமத்திலேயே வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வனராஜ், தனது தாய் வீட்டிற்கு சென்று சீட்டுப் பணம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி சின்னத்தாயை மகன் வனராஜ் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சின்னதாயை  வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சின்னத்தாய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

நாடகமாடிய மகன் கைது

இதனைத் தொடர்ந்து சின்னதாயின் உடலை பெற்ற வனராஜ், தனது தாய் வயதுமூப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கிராம மக்களிடம் கூறி அவசரம் அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக வெங்கடேசன் உமராபாத் போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் சின்னதாயின் உடலை கைப்பற்றிய உமராபாத் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வனராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story