கறம்பக்குடியில் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் சாவு
பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள விளாரிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 55). இவர் கறம்பக்குடி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் கறம்பக்குடி செட்டி தெரு முக்கத்தில் மின் பாதையை சீரமைக்கும் பணியை கண்காணித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்ட சக ஊழியர்கள் ரெங்கசாமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெங்கசாமி வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியில் இருக்கும் போது மின்வாரிய ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story