பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 11:32 PM IST (Updated: 6 April 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாயல்குடி, 
கடலாடியில் பா.ஜ.க. வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலாடி பகுதியில் உலா ஆற்றுப்படுகையில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி மாலை, வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, முன்னாள் ஒன்றிய தலைவர் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பா.ஜ.க. உதய தினத்தையொட்டி கட்சியினர் ஊர்வலம் சென்றனர். அதேபோல் சாயல்குடியில் பாஜக உதய தினத்தை முன்னிட்டு மாநில பிரசார செயலாளர் நாகூர் பாண்டியன் தலைமையில், கிளைத் தலைவர் முத்து, ஓ.பி.சி. மண்டல தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலையில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

Next Story