ஜோலார்பேட்டை பகுதியில் ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஜோலார்பேட்டை பகுதியில் ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 23.8 லட்சம் மதிப்பீட்டில் கோட்டூர் செல்லும் சாலையில் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணியினை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சின்னகம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.13.40 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, ஏலகிரி கிராமத்தில் ரூ.1.90 லட்சம் மதிப்பீட்டில் வரப்பு கட்டுதல் மற்றும் செடிகள் பராமரிப்பு பணி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து அம்மையப்பன் நகரில் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி கசிவு நீர் குட்டை அமைக்கும் பணி, புள்ளானேரியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தும்பன் ஏரி முதல் ஒட்டப்பட்டி ஏரி வரை உள்ள வரத்து கால்வாய் பராமரிப்பு மற்றும் தூர்வாருதல் பணியினையும் கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பணிகளை விரைவாகவும், சிறந்த முறையில் செயல்படுத்தவும் கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், விநாயகம், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story