சிவகங்கை பஸ்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம்
சிவகங்கை பஸ்நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் நகரசபைத்தலைவர் திறந்து வைத்தார்
சிவகங்கை,
சிவகங்கை பஸ்நிலையத்தில் நகராட்சி சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பழுதடைந்து விட்டது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து சிவகங்கை நகராட்சியின் சார்பில் புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை தொடங்கிவைத்து அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், ஏற்கனவே பழுதடைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தையும் பழுது நீக்கி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரசபை துணை தலைவர் கார்கண்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், அயூப்கான், ஜெயகாந்தன், விஜயகுமார் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story