ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி கைது
லால்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
லால்குடி, ஏப்.7-
லால்குடியில் பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மண்டல துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பட்டாவில் திருத்தம்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த கல்லக்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (40). நடராஜனுக்கு, முதுவத்தூர் கிராமத்தில் காலிமனை உள்ளது. இவரது பெயரில் உள்ள பட்டாவில் பெயர் திருத்தம் செய்ய லால்குடி தாலுகா அலுவலகத்துக்கு ஆன்-லைன் மூலம் லட்சுமி விண்ணப்பித்திருந்தார்.
பின்னர், தனது மனு மீதான நடவடிக்கை குறித்து விசாரிக்க அவர், தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு புள்ளம்பாடி மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த திருச்சி பாலக்கரையை சேர்ந்த பிரபாகரன் (39), முதுவத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த சதீஷ்குமார் (35) ஆகியோர் பணியில் இருந்தனர்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
அவர்கள் ரூ.15 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் திருத்தம் செய்து தருவோம் என்று லட்சுமியிடம் கூறியுள்ளனர். பின்னர் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் கேட்டனர். லஞ்சம் தர விரும்பாத லட்சுமி இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை வாங்கிய லட்சுமி, லால்குடி தாசில்தார் அலுவலகத்துக்கு நேற்று காலை சென்றார். அங்கு இருந்த துணை தாசில்தார் பிரபாகரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார்.
கைது
அதை அவர்கள் பெற்றபோது, தாலுகாஅலுவலகத்தில் சாதாரண உடையில் அங்கு இருந்த திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைபோலீஸ்சூப்பிரண்டுமணிகண்டன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னவெங்கடேஷ், சக்திவேல், சேவியர் ராணி ஆகியோர் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் இருவரிடமும் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். மேலும் தாலுகா அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் பிரபாகரன், கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் இருவரும் திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சிறப்பு நீதிபதி ஆர்.கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றகாவலில்வைக்கநீதிபதிஉத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் லால்குடி தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story