உக்கிரமாகாளி அம்மன் தேர் வீதியுலா


உக்கிரமாகாளி அம்மன் தேர் வீதியுலா
x
தினத்தந்தி 7 April 2022 1:28 AM IST (Updated: 7 April 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

உக்கிரமாகாளி அம்மன் தேர் வீதியுலா

திருச்சி, ஏப்.7-
திருச்சி தென்னூரில் உலகாளும் நாயகியாக உக்கிரமாகாளி அம்மன் கோவில் திகழ்கிறது. சோழ மன்னர்களால் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, பின்பு கிராம தேவதையாக வணங்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் காளிவட்டத்துடன் தொடங்கியது. 2-வது நாளான நேற்று சுத்தபூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பகலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் தேரில் எழுந்தருளி, தென்னூரில் உள்ள முக்கிய வீதிகளில் தேர் வீதியுலா நடந்தது. பக்தர்கள் தேரில் எழுந்தருளிய அம்பாளை பூஜித்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் மற்றும் திருத்தேர் பவனி இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. திருச்சி தென்னூர் பிடாரி மந்தையில் ஸ்ரீசந்தன கருப்பு சுவாமியின் குட்டி குடித்தல் நிகழ்ச்சி மற்றும் அருள்வாக்கு நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடல், அம்பாள் வீதி உலா நடக்கிறது. 10-ந் தேதி விடையாத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story