புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயத்தில் சமபந்தி விருந்து


புனித வெள்ளியை முன்னிட்டு  தேவாலயத்தில் சமபந்தி விருந்து
x
தினத்தந்தி 7 April 2022 1:40 AM IST (Updated: 7 April 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயத்தில் சமபந்தி விருந்து நடந்தது.

ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளியை முன்னிட்டு ஆண்டுதோறும் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று இரவு சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது.
இதில் மத வேறுபாடு இன்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தனர். 
முன்னதாக ஆலய பங்கு தந்தையும், மறைவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில், உதவி பங்கு தந்தை ராயப்பதாஸ் முன்னிலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story