கயத்தாறு அருகே துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு


கயத்தாறு அருகே துணிகரம்: வீட்டின் பூட்டை உடைத்து  6 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 7 April 2022 7:13 PM IST (Updated: 7 April 2022 7:13 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்

கயத்தாறு:
கயத்தாறு அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வெளிநாட்டில் வேலை
கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கீழத்தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவரது மகன் ஆறுமுகவேல் (வயது 31). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது. இங்குள்ள அவரது வீட்டில் மனைவி சத்யா (22) மட்டும் வசித்து வருகிறார். இரவு நேரங்களில் சத்யா அதே ஊரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்று விடுவார். இதேபோல்  இரவு வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
திருட்டு
அதிகாலை வீட்டிற்கு சத்யா வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பின்னர் பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது.
3 பவுன் நெக்லஸ், 2 பவுன் டாலர் செயின், ஒரு கம்மல் என மொத்தம் 6 பவுன் நகைகள் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சத்யா கயத்தாறு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story