திண்டுக்கல்லில் ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதம்


திண்டுக்கல்லில் ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதம்
x
தினத்தந்தி 7 April 2022 8:17 PM IST (Updated: 7 April 2022 8:17 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஆட்டோ மோதி ரெயில்வே கேட் சேதம் அடைந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், ஜி.டி.என். சாலையில் எம்.எஸ்.பி. பள்ளி அருகே ரெயில்வே கேட் உள்ளது. திண்டுக்கல்லில் இருந்து பழனி மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இந்த வழித்தடத்தில் தான் சென்று வருகின்றன. இந்த நிலையில்  இன்று காலையில் பழனியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதையொட்டி ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.
அப்போது அந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரெயில்வே கேட் மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி மற்றும் ரெயில்வே கேட் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ டிரைவர் மற்றும் ஆட்டோவில் வந்த மாணவ-மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சேதமடைந்த ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆட்டோ டிரைவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story