திண்டுக்கல்லில் உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
திண்டுக்கல்லில் உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இன்று உலக சுகாதார தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு டீன் விஜயகுமார் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் நர்சிங் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் சரிவிகித உணவு சாப்பிடுவதன் அவசியம், சுகாதாரத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். மேலும் விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பினர். அரசு மருத்துவமனையில் தொடங்கிய ஊர்வலம் திருச்சி ரோடு, பஸ் நிலைய சாலை மற்றும் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனைக்கு வந்து நிறைவடைந்தது.
,
Related Tags :
Next Story