லாரியில் மரம் கடத்திய வியாபாரி கைது


லாரியில் மரம் கடத்திய வியாபாரி கைது
x
தினத்தந்தி 7 April 2022 9:00 PM IST (Updated: 7 April 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

லாரியில் மரம் கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

கன்னிவாடி:
கன்னிவாடி அருகே உள்ள பன்றிமலையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). மர வியாபாரி. இவர், பன்றிமலை கரும்பாறையில் விலை உயர்ந்த தோதகத்தி மரத்தை துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு லாரியில் செம்பட்டியில் உள்ள மர அறுவை மில்லுக்கு கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னிவாடி வனச்சரகர் சக்திவேல், வனவர்கள் அறிவழகன், வெற்றிவேல், வனக்காப்பாளர்கள் பாண்டி, ரமேஷ் பாபு, திலகராஜா ஆகியோர் செம்பட்டியில் மர அறுவை மில் அருகே காத்திருந்தனர். 
அப்போது பிரபாகரன் லாரியில் தோதகத்தி மரங்களுடன், மர அறுவை மில்லுக்கு வந்தார். இதையடுத்து வனத்துறையினர் லாரியை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் லாரியில் 30 தோதகத்தி மரத்துண்டுகள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும். இதைத்தொடர்ந்து பிரபாகரனை வனத்துறையினர் கைது  செய்தனர். மேலும் தோதகத்தி மரத்துண்டுகள் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story