தூத்துக்குடியில் ரெயில்வே ஊழியர் சங்க கூட்டம்


தூத்துக்குடியில்  ரெயில்வே ஊழியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 7 April 2022 10:05 PM IST (Updated: 7 April 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ஊழியர் சங்க கூட்டம் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு ரெயில்வே ஊழியர் சங்க கிளை நிர்வாக குழு கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு கிளைத்தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், காந்திசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை மண்டல தலைவர் ராஜாஸ்ரீதர், மதுரை கோட்ட செயலாளர் ரபீக், தலைவர் செந்தில்குமார், சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், ரெயில்வேயில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. உதவி கோட்ட செயலாளர்கள் சபரிவாசன், சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story