ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு


ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின்  மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2022 10:23 PM IST (Updated: 7 April 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே கோவிலூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இன்று மாலை இங்குள்ள தலைமை டாக்டர் அறை மேற்கூரையின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது அந்த அறையில் யாரும் இல்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story