வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்
வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே அன்னியூரை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 23). இவர் ரூ.250-க்கு கண் கண்ணாடி ஒன்றை கூகுள்பே மூலம் பணம் செலுத்தி ஆர்டர் செய்துள்ளார். பின்னர் பிரதீப்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், தான் கூரியர் கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி நீங்கள் ஆர்டர் செய்த கண்ணாடி, கூரியர் பிளாக் ஆகிவிட்டதால் அதனை பெற ரூ.4 கட்ட வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய பிரதீப்குமார், அந்த நபர் அனுப்பிய ஒரு லிங்கிற்குள் சென்று தனது பின் எண்ணை பதிவு செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் பிரதீப்குமாரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.52,079-ஐ எடுத்து விட்டதாக பிரதீப்குமாரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story